Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கங்கனாவுக்கு 3வது முறையாக சம்மன்

19 நவ, 2020 - 17:30 IST
எழுத்தின் அளவு:
Kangana-and-her-sister-got-summon-third-time

மத கலவரத்தை தூண்டும் வகையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பட காஸ்டிக் இயக்குனர் முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் பாந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் பாந்திரா போலீசார் 3வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி நடிகை கங்கனா வருகிற 23-ந் தேதியும், அவரது சகோதரி வருகிற 24-ந் தேதியும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த முறை ஆஜராகாவிட்டால் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அமிதாப்பச்சன் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்அமிதாப்பச்சன் படத்தில் ரகுல் ப்ரீத் ... தாய்ப்பால் தானம் செய்து அசத்திய தயாரிப்பாளர் தாய்ப்பால் தானம் செய்து அசத்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
20 நவ, 2020 - 10:52 Report Abuse
 Muruga Vel அர்னாப் கோசாமி ..கங்கனா ரனாவத் இவுங்க தான் எதிர் கட்சி ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in