Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போதை மருந்து வழக்கு : தீபிகா படுகோனே மானேஜர் தலைமறைவு

03 நவ, 2020 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Deepika-Padukone-manager-untraceable

பாலிவுட்டில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்தபோது சுஷாந்த் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும், அவரது காதலி ரியா அவருக்கு போதை மருந்து கொடுத்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர் மீது போதை மருந்து பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் வழக்கு தொடரப்பட்டது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி நடிகை தீபிகா படுகோனே அவரது மானேஜர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரிஷ்மா பிரகாஷ் வீட்டில் திடீர் சோதனை நடத்தியபோது போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து கரிஷ்மா பிரகாஷ் போதை மருந்து வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். விசாரணைக்கு கடந்த 28ம் தேதி ஆஜராகுமாறு கரிஷ்மா பிரகாசுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. ஆஜரானால் கைது செய்யப்படும் வாய்ப்பிருப்பதால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இதை தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கரிஷ்மா பிரகாஷ் கைது செய்யப்பட்டால் அது தீபிகா படுகோனேவுக்கு கடும் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரவீணா பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் புகார்ரவீணா பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: ... கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் மனு ஸ்மிருதி பற்றிய கேள்வி : சர்ச்சையில் அமிதாப் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் மனு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

swa -  ( Posted via: Dinamalar Android App )
03 நவ, 2020 - 13:45 Report Abuse
swa சீர்கேடு கூத்தடிகளால்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in