Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இச்சாதாரி பாம்பின் கதை: 3 பாகங்களாக உருவாகிறது நாகின்

29 அக், 2020 - 12:08 IST
எழுத்தின் அளவு:
nagin-to-be-ready-in-3-parts

மனித உருவம் எடுத்து பழிவாங்கும் இச்சாதாரி பாம்பு என்கிற ஒன்லைன் ஸ்டோரியை வைத்து பல படங்கள் வெளிவந்து விட்டது. தற்போது சீரியலும் பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.


1976 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நாகின். மனித உருவமாக மாறும் சக்திகொண்ட இச்சாதாரி பாம்பு , தனது ஜோடியைக் கொன்ற 5 மனிதர்களைப் பழிவாங்கும் கதை. இந்தப் படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் நீயா என்ற பெயரில் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா..." பாடல் இன்றைக்கு காதல் சோக கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.


இந்தியில் நாகின் மீண்டும் 1986ம் ஆண்டு உருவானது பழிவாங்கும் பாம்மாக ஸ்ரீதேவி நடித்தார். 2015ல் நாகின் என்கிற பெயரில் 5 வருடங்களாக இந்தியில் மெகா சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது நாகின் படத்தை மீண்டும் உருவாக்குகிறார்கள். நிகில் திவிவேதி தயாரிக்கிறார். விஷால் பியூரியா இயக்குகிறார். இதனை 3 பாகமாக தயாரிக்க இருக்கிறார்கள். ஷ்ரத்தா கபூர் நாகின் என்ற பழிவாங்கும் இச்சாதாரி பாம்பாக நடிக்கிறார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தீபிகா படுகோன் மானேஜர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்தீபிகா படுகோன் மானேஜர் வீட்டில் ... உதவியாளருக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் உதவியாளருக்கு கார் பரிசளித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in