Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மகேஷ் பட் துன்புறுத்துகிறார் : பாலிவுட் நடிகை புகார்

25 அக், 2020 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Maheshbhatt-torchering-me-says-Actress-Luviena

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான மகேஷ் பட், கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். ஆலியா பட்டின் தந்தையான இவர் குறிப்பாக பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை மரணத்தை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளில், அவரது பட வாய்ப்புகளை பறித்தவர் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளானார். அதன் பின்னர் சுஷாந்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியை அவரிடமிருந்து பிரித்ததும் இந்த மகேஷ் பட் தான் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது லுவினா லோத் என்கிற பாலிவுட் நடிகை மகேஷ் பட்டால் தான் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இரண்டு நிமிட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லுவினா லோத். அதில் அவர் கூறியிருப்பதாவது ;

“மகேஷ் பட்டின் உறவினரான ஸ்மித் சபர்வால் என்பவரைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் போதை மருந்து சப்ளை செய்கிறார் என்கிற விவரங்கள் தெரிய வந்தது. போதை மருந்து சப்ளை செய்வதுடன் பெண் வியாபாரமும் செய்து வருகிறார். இதனால் அதிர்ந்துபோய், அவரிடம் இருந்து பிரிந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து உள்ளேன்.

மகேஷ் பட்டை பொறுத்தவரை பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய தாதா. அவர் சொல்கிறபடி நாம் நடக்காவிட்டால் அவரால், எந்த ஒருவரின் வாய்ப்புகளையும் பறித்துக் தூக்கிப்போட முடியும். மற்றவர்களின் வாழ்வை சிதைக்க முடியும்.. என்னை அவர் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார் இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்க சென்றாலும் அவர்கள் என்னுடைய புகாரை ஏற்கவில்லை. எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் அதற்கு மகேஷ் பட் மற்றும் அவரை சேர்ந்த இன்னும் நான்கு பேர் தான் பொறுப்பு” என்று அவர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார் லுவினா லோத்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆபாச தளங்களாக மாறிய ஓடிடி தளங்கள்: கங்கனா கோபம்ஆபாச தளங்களாக மாறிய ஓடிடி தளங்கள்: ... அரசியலில் களமிறங்கினார் பாயல் கோஷ் அரசியலில் களமிறங்கினார் பாயல் கோஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Manian - Chennai,ஈரான்
29 அக், 2020 - 04:40 Report Abuse
Manian என்னியுமே அப்படி பணணாறு. போலீசுக்கு போவேன்னா,ஒடனே தாலிகட்டினாறு. சின்ன வூடு வேண்டம்னே, அதான் இப்புடி சில்மிசம் பண்ணுதாரு. பட் மனைவி மைனாகவதி பட்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
28 அக், 2020 - 03:55 Report Abuse
Manian பிறக்கும்போதே அதிக டெஸ்ட்டிராஸ்டோனுடன் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்க.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26 அக், 2020 - 07:23 Report Abuse
 Muruga Vel திரையுலக ஆசாராம் பாபுவா இருப்பார் போல இருக்கே ..இவர் அப்படி என்ன லேகியம் சாப்பிடறார் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in