வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
மும்பை: கலவரத்தை தூண்டும் கருத்துப்பதிவு தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
டுவிட்டர் வாயிலாக, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேலுக்கு எதிராக, மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த சில தினங்களுக்கு முன் விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மும்பை போலீசார், கங்கனா ராணவத் அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் இருவரும் இன்று(அக்.22) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.