போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் |
ஷாருக்கான், கஜோல் நடித்த வெள்ளி விழா படமான 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு 5 கோடியில் தயாரான இந்தப் படம் 120 கோடியை சம்பாதித்தது. ஷோலே படத்திற்கு அடுத்த சாதனை படமாக இது விளங்குகிறது.
இந்த படத்தின் மீது கொண்ட காதலால் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டர் உரிமையாளர் இந்தப் படத்தை 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக தனது தியேட்டரில் காலை காட்சியாக திரையிட்டு வந்தார். கொரோனா ஊரடங்கின்போது தான் நிறுத்தப்பட்டது. கடைசி காட்சியில் கூட 120 பேர் படம் பார்த்துள்ளனர்.
இந்த படத்தின் வெள்ளி விழாவை கவுரவிக்கும் வகையில் லண்டன் லீஸ்டர் ஸ்கொயரில் ஷாருக்கான் மற்றும் காஜோலின் வெண்கல சிலைகள் வைக்கப்படுகிறது. இங்கு இதுவரை ஹாரிபார்ட்டர், லாரல் ஹார்டி, கெனே கெலி பிரம் சிங்கிங், ரெய்ன், வொண்டர் உமன் படங்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதாவது தனி நபர் சிலையாக இல்லாமல் படத்தின் காட்சி அல்லது படத்தில் நடித்தவர்களின் தோற்றம் இங்கு சிலையாக வைக்கப்படும். அந்த வரிசையில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' படத்தில் ஷாருக்கானும், கஜோலும் ஆரத்தழுவிக் கொண்டு நிற்கும் பிரபலாமான காட்சி இங்கு சிலையாக வைக்கப்படுகிறது.