சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
ஹிந்தித் திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டார்.
சிகிச்சைக்குப் பின் துபாயில் இருக்கும் தனது குழந்தைகளைப் பார்க்க மனைவியுடன் சென்றார். அங்கிருந்து திரும்பிய பின் மீண்டும் தனது பட வேலைகளை ஆரம்பிக்க உள்ளார். நவம்பர் மாதம் முதல் அவர் நடித்து வரும் 'கேஜிஎப் 2' படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த வாரம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சமீபத்தில் 'பிஇடி' என்ற சோதனை ஒன்றை சஞ்சய் தத் மேற்கொண்டாராம். கேன்சர் செல்கள் எதுவும் சஞ்சய் தத் உடலில் இல்லை என்று சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது என பாலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பை சஞ்சய் தத் வெளியிடலாம் எனத் தெரிகிறது.