Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'

20 அக், 2020 - 13:45 IST
எழுத்தின் அளவு:
25-years-of-Dilwale-Dulhania-Le-Jayenge

ஆதித்ய சோப்ரா இயக்கத்தில் ஜதின் லலித் இசையமைப்பில் ஷாரூக்கான், கஜோல் மற்றும் பலர் நடித்து 1995ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வெளிவந்த படம் 'தில்வாலே துல்ஹாசனியா லே ஜாயேங்கே'.

இப்படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. ஹிந்தித் திரையுலகில் வெளிவந்த சில படங்கள் மட்டுமே காலத்தைக் கடந்து ரசிகர்கள் மனதில் நிற்கும். அப்படி ஒரு படமாக இப்படம் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.

ஹிந்தி தெரியாத ரசிகர்கள் கூட இப்படத்தின் பாடல்களை மிகவும் ரசித்தனர். ஷாரூக், கஜோல் இருவரது பொருத்தமான ஜோடி ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

இப்படம் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் 1251 வாரங்களைத் தாண்டி ஓடி இருக்கிறது. அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த ஒரே படம் என்ற பெருமையை தக்க வைத்துள்ளது. கொரானோ ஊரடங்கு முடிந்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் படத்தைத் தொடர்ந்து திரையிடுவார்கள்.

இப்படத்தின் 25 வருட கொண்டாட்டத்திற்காக ஷாரூக் மற்றும் கஜோல் அவர்களுடைய டுவிட்டர் ஐடியை இப்படத்தின் கதாபாத்திரப் பெயர்களான 'ராஜ்' மற்றும் 'சிம்ரன்' என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

“ராஜ் மற்றும் சிம்ரன். 2 பேர் ஒரு படம், 25 வருடங்கள், காதல் வருவது இன்னும் குறையவில்லை. இன்று இப்படம் இப்படி கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர்களுக்கு மிகப் பெரும் நன்றி. ஒரு பெரும் நிகழ்வு மற்றும் அவர்களது வரலாற்றின் ஒரு பகுதி இது. ரசிகர்கள், உங்கள் அனைவருக்கும் உரத்த குரலில் ஒரு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார் கஜோல்.

“25 வருடங்கள், ராஜ் மற்றும் சிம்ரனை, உங்கள் முழு மனதுடன் நேசித்ததற்காக உங்களுக்கு ஒன்றி சொல்கிறோம். இது எப்போதுமே சிறப்பான உணர்வைத் தருவது,” என்று ஷாரூக் தெரிவித்துள்ளார்.

இவர்களின் பதிவை அடுத்து டுவிட்டரில் #DDLJ25, #25YearsOfDDLJ, #DilwaleDulhaniaLeJayenge, #Simran, #Kajol ஆகிய ஹேஷ்டாக்குகளில் இப்படம் தொடர்பான விஷயம் டிரெண்ட் ஆனது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்லட்சுமிபாம் திருநங்கைகளை ... கேன்சர் பாதிப்பு - முழுமையாக மீண்ட சஞ்சய் தத்? கேன்சர் பாதிப்பு - முழுமையாக மீண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in