பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
ஹிந்தித் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் கடந்த ஆகஸ்ட் மாதம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பின் துபாயில் உள்ள தன் குழந்தைகளைப் பார்க்க மனைவி மான்யதா உடன் சென்றார். அங்கிருந்து தற்போது மும்பைக்குத் திரும்பிவிட்டார்.
அவருடைய ஹேர் ஸ்டைலை மேற்கொள்ள மும்பையில் உள்ள பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கிடம் சென்றுள்ளார். அதன் வீடியோவை ஆலிம் பதிவிட்டுள்ளார். அதில் பேசிய சஞ்சய் தத் விரைவில் கேன்சரிலிருந்து மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடைய தலையில் உள்ள ஒரு வடுவை காண்பித்து, “என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த சமீபத்திய வடு இது. இதிலிருந்து விரைவில் மீண்டு வருவேன். இந்த தாடி 'கேஜிஎப்' படத்துக்காக வைத்துள்ளது. நவம்பர் மாதம் முதல் அதன் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகிறது. மீண்டும் படப்பிடிப்பிற்குப் போவது மகிழ்ச்சி. நாளை முதல் 'ஷாம்ஷெரா' படத்திற்காக டப்பிங் செய்ய உள்ளேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் தத் 'கேஜிஎப் 2 'படப்பிடிப்பிற்கு மீண்டும் வர உள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.