மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ். சமீபத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது இவர் பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுராக்கிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பாயல் மகராஷ்டிர கவர்னர் மற்றும் உள்துறை இணை அமைச்சரை சந்தித்தும் புகார் அளித்தார்.
தற்போது ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளார். கங்கனாவுக்கு வழங்கப்பட்டது போல் தனக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தை டேக் செய்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: ''என்னை இந்தி பட உலக மாபியாக்கள் கொலை செய்து விடுவார்கள். அந்த கொலையை தற்கொலை என்றும் நிரூபித்துவிடுவார்கள்''. என்று கூறியிருக்கிறார்.