முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் திரையுலகம் குறித்தும் சில நேரங்களில் மகாராஷ்டிரா அரசை எதிர்த்தும் கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது லேட்டஸ்டாக, மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு என டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதை, தீவிரவாத செயலுக்கு இணையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது எப்படி, குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தபோது அதில் சில தீவிரவாத அமைப்புகள் புகுந்து அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டி விட்டார்களோ, அதேபோன்ற தீவிரவாதம் தான் இப்போதும் தூண்டப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார் கங்கனா. இவரது கருத்து விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ரமேஷ் நாயக் என்ற வழக்கறிஞர் கங்கனாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள தும்கூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை பரிசீலித்த நீதிமன்றம் கங்கனாவின் மீது வழக்குப்பதிவு செய்யும்படி கர்நாடக போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.