முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சுஷாந்தின் மரணத்துக்கு அவரது காதலியான நடிகை ரியா தான் காரணம் என்று சுஷாந்த்தின் தந்தை குற்றம் சாட்டினார். இதுகுறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே திடீரென ரியா, போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் ரியா அளித்த தகவல்களின் படி மேலும் பல பாலிவுட் மற்றும் தெலுங்குப் பட நடிகைகள் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் ரியா ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் பரபரப்பாக ஊடகங்களில் அடிபட்டு வரும் ரியாவின் வாழ்க்கை படமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரியாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க மூன்று இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனராம். கதையைத் தயார் செய்து விட்டதாகவும், ரியாவை நேரில் சந்தித்து அனுமதி வாங்கியவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகி விடும் என்றும் கூறப்படுகிறது.