மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணம் தொடர்பாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில், சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி மீது சுஷாந்த்துக்கு போதைப்பொருள் தருவித்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம். ரியா ஜாமீனில் சிறையிலிருந்து வெளி வந்துள்ளார்.
இதுகுறித்து ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே கூறும்போது, “ரியா சிறையில் இருந்தபோது அவ்வப்போது நான் சென்று பார்த்து வந்தேன்.. அவர் ஏற்கனவே மீடியாக்களால் வேட்டையாடப்பட்டு மனதளவில் காயம் பட்டிருந்தார். அதேசமயம் சிறையில் அவர் யோகா பயிற்சிகள் செய்து தனது மனதையும் உடலையும் வலிமை படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாது தனது சக கைதிகளுக்கும் யோகா பயிற்சியை கற்றுக்கொடுத்துள்ளார்.
அவர் ராணுவ குடும்பத்தில் பிறந்து, ராணுவ பள்ளிகளில் படித்து வளர்ந்தவர். அதனால் தன்னை எப்போதுமே வலிமையாக வைத்துக் கொள்வதிலும் தன்மீது அவதூறு பரப்ப முயற்சி செய்,து தன்னுடைய விருப்பங்களை முறியடிக்க முயற்சி செய்பவர்களை எதிர் கொள்ளவும் இதுபோன்ற சூழல்களை எதிர்த்து போராடவும் பழகியுள்ளார்” என்று கூறியுள்ளார் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே.