பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது எளிதானதல்ல : குப்ரா சயித் | சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜா | புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர் | கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் | ரம்யாவின் வொர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் கமெண்ட்ஸ் | 'புஷ்பா 2' : கமல்ஹாசன் மட்டும் மிஸ்ஸிங் | கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி |
புதுடில்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம், கொலை அல்ல; தற்கொலை தான், என, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த, டில்லி, எய்ம்ஸ் மருத்துவக் குழு தலைவர், டாக்டர் சுதிர் குப்தா அறிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், ஜூன், 14ல், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, காதலி ரியா சக்கரவர்த்தி மீது, சுஷாந்த் சிங் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். அவர்களின் வழக்கறிஞர் விகாஸ் சிங், சுஷாந்த் சிங் கழுத்து இறுக்கி கொல்லப்பட்டதற்கான அடையாளத்தை பார்த்ததாக, எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், எய்ம்ஸ் டாக்டர்கள் குழு, சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்தது குறித்த அறிக்கையை, சமீபத்தில், சி.பி.ஐ.,யிடம் வழங்கியது.
இது குறித்து, சுதிர் குப்தா, தனியார் டிவிக்கு அளித்த பேட்டி: சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை. அவர் கொலை செய்யப்படவில்லை. தற்கொலை தான் செய்து கொண்டார். பிரேத பரிசோதனை ஆய்வில் இது தெரிய வந்துள்ளது என்றார்.
இதனால், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான மர்மம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், தற்கொலைக்கு துாண்டியதாக, சி.பி.ஐ., வழக்கை தொடரும் என, தெரிகிறது.
இதற்கிடையே, ரியா சக்கரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே, உண்மையை ஒருநாளும் மறைக்க முடியாது. சி.பி.ஐ.,யின் அதிகாரபூர்வ அறிக்கை வரட்டும், என, தெரிவித்துள்ளார்.