Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்

29 செப், 2020 - 19:50 IST
எழுத்தின் அளவு:
ரியாவுக்கு-ஜாமீன்-தரக்கூடாது-;-போதைப்பொருள்-கட்டுப்பாட்டு-துறை-தீவிரம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு துறை அவரிடம் கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகிறது.. சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருளை வரவழைத்து கொடுத்தார் என்பதுடன், மேலும் பல நடிகைகளுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்வது தொடர்பாக ரியாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகைகளிடமும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் விண்ணப்பத்திருந்தார் ரியா. ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறை தீவிரமாக எதிர்த்து வருகிறது. காரணம், ரியா போதை பொருள் வாங்குவதற்காக மட்டும் பணத்தை தனது கணக்கில் இருந்து கைமாற்றவில்லை என்றும் போதைப்பொருளை புழக்கத்தில் விடும் அவர்களுக்கும் நிதி உதவியும் செய்துள்ளார் என்கிற விபரமும் அவரது வங்கிக்கணக்கின் மூலமாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் இந்த ஆதாரங்களை முன்வைத்து, ரியாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என நீதிமன்றத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் ரியாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டேமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் ... ரியாவுக்கு எதிராக பலத்த ஆதாராம் ரியாவுக்கு எதிராக பலத்த ஆதாராம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

amuthan - kanyakumari,இந்தியா
29 செப், 2020 - 23:27 Report Abuse
amuthan வெட்ட வேண்டியதை சரியாக வெட்டினால் போதும். சேகர் ரெட்டி கேசே முடிந்தது விட்டது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in