விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் |
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து, போலீசார் விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார். சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்பது அவர் மூலமாக தெரிய வந்தது.. அது குறித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியபோது பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, ஸ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட சில நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தியதாக தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று போதை பொருள் தடுப்பு துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் தீபிகா படுகோனே. அவரிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின்போது மூன்றுமுறை கண்ணீர் விட்டு அழுதாராம் தீபிகா படுகோனே.. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள், அழுது நாடகம் போடாமல் விசாரணைக்கு முழுதாக ஒத்துழைக்குமாறு தீபிகா படுகோனேவிடம் கண்டிப்புடன் கூறினார்களாம்.. விசாரணையின்போது தீபிகா படுகோனே அழுத விஷயம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது