பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். தற்போது, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள போதை மருந்து வழக்கு சர்ச்சையில் சிக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியிடம் நடத்திய விசாரணையில் ஷ்ரத்தா கபூரின் பெயரும் வெளியானதால் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷ்ரத்தா கபூருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அந்த விசாரணையில் சுஷாந்த்தும் தானும் நடித்து வெற்றி பெற்ற படத்திற்காக கடந்த வருடம் சுஷாந்த் தனது வீட்டில், பலருக்கும் பார்ட்டி கொடுத்தார் என்றும் அங்கே மதுவகைகளுடன் போதை பொருளும் சப்ளை செய்யப்பட்டன என்றும் ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அவற்றையெல்லாம் நான் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ள அவர் படப்பிடிப்பு தளத்திலேயே பலமுறை சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னுடைய கேரவனுக்குள் போதை பொருளை உட்கொண்டதையும் தான் பார்த்ததாக அந்த விசாரணையில் கூறியுள்ளார்.