Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நான் தூக்கில் தொங்கினால் அது நிச்சயம் தற்கொலையல்ல: பாயல் கோஷ்

25 செப், 2020 - 19:52 IST
எழுத்தின் அளவு:
If-by-body-recovered-in-hang-it-is-not-suicide-says-Payal-ghosh

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை பாயல் கோஷ். இந்தக் குற்றச்சாட்டை அனுராக் காஷ்யப் மறுத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அனுராக் காஷ்யப் மீது மும்பை வெர்ஸோவா காவல் நிலையத்தில் பாயல் புகாரும் அளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து அனுராக் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுராக் விரைவில் கைது செய்யப்படவேண்டும் என்று பாயல் கோஷின் வழக்கறிஞர் நிதின் சத்புதே வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், “தூக்கில் தொங்கிய நிலையில் நான் சடலமாக மீட்கப்பட்டால் நிச்சயம் அது கொலையாகத் தான் இருக்கும். தற்கொலையாக இருக்காது” என தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாயல்.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கொலையா, தற்கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பாயலின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறிய போதே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பிரதமர் மோடி உள்ளிட்டோரிடம் பாயல் பாதுகாப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'விக்கி டோனார்' நடிகர் புபேஷ் புற்றுநோயால் மரணம்'விக்கி டோனார்' நடிகர் புபேஷ் ... அதெப்படி என்னைப் பற்றி அப்படிப் பேசலாம்: சுனில் கவாஸ்கரைக் கண்டித்த அனுஷ்கா சர்மா! அதெப்படி என்னைப் பற்றி அப்படிப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
26 செப், 2020 - 15:30 Report Abuse
Tamilachi ஊடகங்கள் எல்லாம் இடது சாரி மற்றும் தீவிரவாத கும்பல்களின் ஆதிக்கத்தில் இருப்பதால் நீ சொல்வது மறுக்க முடியாத உண்மை....
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
29 செப், 2020 - 06:27Report Abuse
NicoleThomsonதினமலர் தவிர்த்து...
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
26 செப், 2020 - 03:08 Report Abuse
NicoleThomson சல்மான்கானின் கொலைவெறி என்பது சமீபத்தில் அவனுக்கு செக்யூரிட்டியாக இருந்து அரசு தரப்பு அப்ரூவராக மாறிய அந்த மாவீரன் எப்படி இறந்து போனான் என்பதை அறிவாயா கோஷ்? பாலிவ்யூட் கொலைகாரர்களை எல்லாவிட்டதையும் அத்துப்படி , இப்போ ஆட்சியாளர்களும் தாவூதுக்கு ஸலாம் அடித்து கொண்டிருப்பதால் நீ கொஞ்சம் உஷாரு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in