Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நிஜத்திலும் ஹீரோவாக நிரூபித்த அக்ஷய் குமார்

22 செப், 2020 - 20:01 IST
எழுத்தின் அளவு:
Akshay-again-proved-as-real-hero

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர். போர்ப்ஸ் பத்திரியின் கணக்குபடி ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார். அதே நேரத்தில் நல்ல காரியங்களுக்காக அள்ளியும் கொடுக்கிறார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதன் முதலில் 25 கோடியை நிவாரணத் தொகையாக அள்ளிக் கொடுத்தார். மும்பை மாநகராட்சி, மும்பை போலீஸ் உள்ளிட்ட பல துறைகளுக்கு நிதி வழங்கினார்.

பொது வெளியில் மட்டுமல்ல சினிமா உலகிலும் தான் நிஜ ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அக்ஷய்குமார் தற்போது நடித்து வரும் படம் பெல்பாட்டம். இதில் வாணிகபூர், லாரா தத்தா, கியூமா குரோஷி ஆகியோரும் நடிக்கின்றனர். ரஞ்சித் எம். திவாரி இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்காட்லாந்து சென்ற படக்குழுவினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து அதன்பிறகே படப்பிடிப்பை தொடங்க அந்த நாடு அனுமதி வழங்கியது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. படப்பிடிப்பு நடக்காமலேயே தயாரிப்பாளர்கள் தினமும் பல கோடிகள் செலவு செய்ய வேண்டியது இருந்தது.

இதை அறிந்த அக்ஷய்குமார் இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தினமும் இரண்டு ஷிப்டுகள் (16 மணி நேரம்) நடித்து தர முன்வந்துள்ளார். தயாரிப்பாளர்களை அழைத்து இதனை கூறிய அக்ஷய்குமார். அதற்கேற்ப படப்பிடிப்பை திட்டமிடுமாறும் கூறியிருக்கிறார். இது தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

படக்குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார்கள். அக்ஷய்குமார் தேவைப்படாத காட்சிகளை ஒரு குழுவினரும், அக்ஷய்குமார் நடிக்க வேண்டிய காட்சிகளை ஒரு குழுவினரும் படமாக்கி வருகிறார்கள். இதனால் திட்டமிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்புகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அனுமதியின்றி விளம்பரத்தில் படம்: நடிகை போலீசில் புகார்அனுமதியின்றி விளம்பரத்தில் படம்: ... போதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா கபூருக்கு  சம்மன் போதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Kavi - Karur,இந்தியா
24 செப், 2020 - 05:13 Report Abuse
Kavi நல்ல மனிதர். பல நல்ல காரியங்கள் செய்து உள்ளார். வாழ்க.
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23 செப், 2020 - 02:51 Report Abuse
NicoleThomson வேற ஒண்ணுமில்லிங்க கார்னர் ஹவுஸ் விஷயத்தில் இவனும் இவனது பையனும் போதையோடு வெளியே வரும் காட்சி பற்றிய செய்திகள் வைரல் அதனால் இவனது இமேஜை பில்ட் பண்றங்களாம்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in