Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனுராக்கிற்கு டாப்சி ஆதரவு

22 செப், 2020 - 09:57 IST
எழுத்தின் அளவு:
Taapsee-supports-Anuragh

கடந்த சில மாதங்களாக பரபரப்பை கிளப்பி வந்த நெபோடிசம் குற்றச்சாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போது பாலிவுட்டில் மீண்டும் 'மீ டூ' சீசன் துவங்கியுள்ளது. நடிகை பாயல் கோஷ் என்பவர் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் பிரதமர் மோடியிடமே கேட்டுகொண்டுளார்.

ஆனால் அனுராக் காஷ்யப் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், இப்டி அவதூறாக குற்றம் சாட்டினால் அதற்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என்று பாயல் கோஷுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் அனுராக் காஷ்யபுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நடிகை டாப்சி.

இதுகுறித்து டாப்சி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “எனக்கு தெரிந்தவர்களிலேயே மிகச்சிறந்த பெண்ணியவாதி என்றால் அது நீங்கள் தான் அனுராக் காஷ்யப்.. உங்களது கிரியேட்டிவான படங்கள் மூலம் பெண்களை எப்படி வலுவான கதாபாத்திரங்களாக உருவாக்குகிறீர்களோ, அதேபோல உங்களது இன்னொரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உங்களை விரைவில் சந்திப்பேன்” என கூறியுள்ளார்.

அனுராக் காஷ்யப் இயக்கிய மேன்மர்ஷியான் என்கிற படத்தில் டாப்சி கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டில் தோற்ற 'மீ டூ' - கங்கனா ரணவத்பாலிவுட்டில் தோற்ற 'மீ டூ' - கங்கனா ... அனுமதியின்றி விளம்பரத்தில் படம்: நடிகை போலீசில் புகார் அனுமதியின்றி விளம்பரத்தில் படம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in