Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மும்பை பங்களா இடிப்பு : 2 கோடி இழப்பீடு கேட்டு கங்கனா வழக்கு

16 செப், 2020 - 15:28 IST
எழுத்தின் அளவு:
Kangana-Ranaut-To-Seek-Rs-2-Crore-Damages-From-BMC-Over-illegal-Demolition-Of-Her-Office

பாலிவுட்டின் அயர்ன்லேடி என்று வர்ணிக்கப்படும் கங்கனா ரணவத். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகளின் ஆதிக்கம், போதை பழக்கம், பாலியல் தொல்லைகள் குறித்து பேசி வருகிறார். குற்றவாளிகளை மகாராஷ்டிர அரசு காப்பாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் மகாராஷ்டிரா அரசுக்கும், கங்கனாவுக்கும் மோதல் ஏற்பட்டது.

மகாராஷ்டிர அரசின் மிரட்டலையும் மீறி மும்பைக்குள் நுழைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாராஷ்டிர அரசு அனுமதி இன்றி மராமத்து பணிகள் செய்ததாக கூறி மும்பையில் உள்ள கங்கனாவின் சொகுசு பங்களாவை இடித்தது. இதனால் மனம் வெறுத்துப்போ கங்கனா மும்பை மினி பாகிஸ்தான், ஆள்பது தலிபான்கள் என்று கூறிவிட்டு மும்பையை விட்டு வெளியேறினார்.


இந்த நிலையில் தனது வீட்டை இடித்த மும்பை மாநகராட்சிக்கு எதிராக கங்கனா மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


பொதுமக்களை பாதிக்கும் சில விஷயங்களை கையாள்வது தொடர்பாக, சமீபத்தில் நான் தெரிவித்த கருத்துகளால், மராட்டிய மாநில அரசுடன் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.அதன் விளைவாக, மும்பை மாநகராட்சி, என் பங்களாவை இடித்தது.


பங்களாவை பழுதுபார்க்க நான் 2018-ம் ஆண்டு அனுமதி பெற்றிருந்தேன். ஆனால், கடந்த 7-ந்தேதி மாநகராட்சி திடீரென நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் அளிக்க வெறும் 24 மணி நேரமே அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் நான் பதில் அளித்தபோதிலும், அவசரகதியில் நிராகரிக்கப்பட்டது. மறுநாளே மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்களாவை இடித்தனர். அவர்கள் ஏற்கனவே அங்குதான் முகாமிட்டு இருந்தனர்.


எனவே, பங்களாவை இடிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் மாநகராட்சியிடம் இருந்துள்ளது. அதன் செயலை 'சட்ட விரோதம்' என்று அறிவிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எனக்கு 2 ரூபாய் கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கங்கனா கூறியுள்ளார். கங்கனாவின் பங்களாவை மேலும் இடிக்க தடை விதித்த நீதிமன்றம், மனு மீதான விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு தள்ளி வைத்தது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.58 கோடி லாபம் சம்பாதித்து தந்த தில் பேச்சராரூ.58 கோடி லாபம் சம்பாதித்து தந்த தில் ... 20 வருடங்களுக்கு முன்பு வித்யா பாலன் 20 வருடங்களுக்கு முன்பு வித்யா பாலன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Abdul Aleem - chennai,இந்தியா
19 செப், 2020 - 13:28 Report Abuse
Abdul Aleem Muthalil antha soththu avarudaiyathuthaana ru mudivu seiyavum athan piragu thaan nasta eedu koranum
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18 செப், 2020 - 06:23 Report Abuse
 Muruga Vel விஜய காந்த் கல்யாண மண்டபம் இடிச்சது இந்த மாதிரி தானா ..இடித்தது கங்கானாவின் கட்டிடம் மட்டும் அல்ல .. அதில் இடிக்கப்பட்டு நாசமான பொருள்கள் பல லட்சங்களை அரசுக்கு வரியாக கிடைத்திருக்கும்
Rate this:
ponssasi - chennai,இந்தியா
17 செப், 2020 - 11:11 Report Abuse
ponssasi அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொந்த பணத்தில் இருந்து வசூலித்து செலுத்த வேண்டும். தனிநபரால் பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டால் அரசு சம்பந்தபட்ட நபர்களிடம் வசூலிப்பது போல. தனி நபருக்கு அரசியல் காழ்புணர்ச்சியால் ஏற்படும் இழப்புக்கு அந்த அரசியல் கட்சியோ அல்லது அதிகாரிகளோ அவர்களின் சொந்த பணத்தில் இருந்துதான் இழப்பீடு தரவேண்டும், இதில் நீதிமன்றம் சரியான வழிகாட்டுதலை பின்பற்றவேண்டும்,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in