'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
மும்பை : போதை பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரியா சக்ரவர்த்தியை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுவதை நிறுத்தக் கோரி பாலிவுட் கலைஞர்கள் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக அவரது தோழி ரியா சக்ரவர்த்தி சகோதரர் ஷோவிக் உள்ளிட்ட 18 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்தி நடிகர் சோனம் கபூர், இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், மீரா நாயர் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் 2500 பேர் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.
செய்தியை வேட்டையாடுங்கள் ; பெண்களை அல்ல என்ற தலைப்பில் வெளியான கடிதத்தின் விபரம் : பத்திரிகை தர்மம், மனிதாபிமானம், கண்ணியம் ஆகியவற்றை காற்றில் பறக்க விட்டு ஒரு பெண் என்றும் பாராமல் ரியாவை காயப்படுத்துகிறீர்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து உங்கள் கேமரா கண்களால் ரியாவின் தனிநபர் உரிமையை பறிக்கிறீர்கள். இதேபோல சல்மான் கான், சஞ்சய் தத் விவகாரங்களில் நீங்கள் செயல்பட்டீர்களா? எவ்வளவு கரிசனத்துடன் செய்தி வெளியிட்டீர்கள்.
ஏன் ரியாவையும் அவரது குடும்பத்தையும் கேவலமாக சித்தரித்து வலைதளத்தில் செய்தி வெளியிடுகிறீர்கள். கொரோனாவால் நாடு சந்தித்துள்ள சுகாதார பிரச்னை, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்ற பல விஷயங்கள் இருக்க மலிவான விளம்பரத்திற்காக ரியாவை தாக்குவது சரியல்ல. ரியா மீதான சூன்யவேட்டையை நிறுத்தி செய்திக்காக வேட்டையாடுங்கள். உங்கள் பணியை சரியான முறையில் பொறுப்போடு செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.