Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கங்கனா ரணாவத் கட்டட விதிமீறல் - நீதிமன்றத்தில் மும்பை மாநகராட்சி மனு

11 செப், 2020 - 09:25 IST
எழுத்தின் அளவு:
Kanagana-house-issue-:-Bumbai-corporation-replied-to-court

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பங்களாவை உள்நோக்கத்துடன் இடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, மும்பை மாநகராட்சி, மறுத்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளதாக, கங்கனா கூறியது, சிவசேனா கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாந்த்ராவில் உள்ள, கங்கனாவின் பங்களாவில், விதிகளை மீறி கூடுதல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவற்றை இடிக்க, மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, கங்கனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், கட்டட இடிப்புக்கு தடை விதித்தது. இதையடுத்து, மும்பை மாநகராட்சி சார்பில், நேற்று உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது : கங்கனா ரணாவத், தன் பங்களாவில், மாநகராட்சி அனுமதியின்றி, சட்ட விரோதமாக கூடுதல் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளார். அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை, அவர் மறுக்கவில்லை. இதில் இருந்து, அவர் சட்டமீறலில் ஈடுபட்டு உள்ளது தெரிய வருகிறது. கட்டடத்தை இடிப்பதில், மாநகராட்சிக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அதுபோல, கங்கனா ரணாவத், மேற்கொண்டு கட்டட பணிகளை தொடர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை, வரும், 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதற்கிடையே, என் பங்களா இடிந்தது போல, முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவம் ஒரு நாள் அழியும் என, கங்கனா ரணாவத், வீடியோ பதிவு வெளியிட்டார். இதையடுத்து, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மோசமாக பேசியது குறித்து, கங்கனா ரணாவத் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, நிதின் விக்ரோலி என்ற வழக்கறிஞர், போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுத்து, நீதிமன்றத்தில் முறையிடுமாறு தெரிவித்து உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த்தின் சகோதரிகள் மீதும் வழக்கு பாய்ந்ததுசுஷாந்த்தின் சகோதரிகள் மீதும் ... சுஷாந்த்தின் மீதான வெறுப்பு தான் ரியாவுக்கு ஆதரவாக வெளிப்படுகிறது : அனுராக் காஷ்யப் சுஷாந்த்தின் மீதான வெறுப்பு தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

IYER AMBI - mumbai,இந்தியா
12 செப், 2020 - 20:08 Report Abuse
IYER AMBI railway station near slum three storey tin sheds also to be demolished. then only their actions will be justified.
Rate this:
K.n. Dhasarathan - chennai,இந்தியா
11 செப், 2020 - 10:39 Report Abuse
K.n. Dhasarathan குதிரை குப்புற தள்ளியது மட்டுமில்லாமல் குழியையும் பறித்ததாம், மும்பை மாநகராட்சி மற்ற அனுமதி பெறாதா கட்டிடங்களை கை வைக்குமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in