Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் நடிகை ரியா கைது

08 செப், 2020 - 17:11 IST
எழுத்தின் அளவு:
Rhea-Chakraborty-arrested

மும்பை: போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்தியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தனர்.

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 14ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, சுசாந்தின் தந்தை, பீஹார் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ரியாவிடம் நடந்த விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதனால், அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) சார்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர், அவரது சகோதரர் ஷோவிக், தங்கியிருக்கும் வீட்டிலும், சுசாந்த் மேலாளர் சாமுவேல் மிராண்டா வீட்டிலும் என்சிபி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் ஷோவிக், மிராண்டா மற்றும் சுசாந்தின் வீட்டு உதவியாளர் தீபேஷ் சாவந்த் ஆகியோரை என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ரியா சக்ரபோர்த்தியிடம் கடந்த ஞாயிறு மற்றும் திங்களன்று ,மும்பையில் உள்ள அலுவலகத்தில் வைத்து, என்.சி.பி., அதிகாரிகள் விசாரிணை நடத்தினர். மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடத்திய நிலையில், அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இன்றே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கங்கனாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்புகங்கனாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு சட்டவிரோதமாக கட்டடம் : கங்கனா வீட்டில் நோட்டீஸ் சட்டவிரோதமாக கட்டடம் : கங்கனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in