'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
பாலிவுட்டின் அயர்ன் லேடி என்று வர்ணிக்கப்படுகிறார் கங்கனா ரணவத். பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகளின் ஆதிக்கம், போதை மருந்து புழக்கம், பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் அவர்தான் முதல் குரல் எழுப்பினார்.
இப்போது பாலிவுட்டின் மாபியா கும்பலின் முக்கிய குற்றவாளியே இயக்குனர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் என்று நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளியே கரண் ஜோஹர் தான். பலரது வாழ்க்கையையும், வேலையையும் நாசமாக்கிய பிறகும் கூட அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை உண்டா? அனைத்தும் சரியானதும் செய்யப்பட்டதும் அவரது கழுதைப்புலி கூட்டம் என்னை தேடி வரப்போகின்றன. இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.
இந்த பதிவை அவர் பிரதமருக்கு டேக் செய்துள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.