Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

குஞ்சன் சக்சேனா படத்துக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு

03 செப், 2020 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Court-denied-to-stay-for-Gunjan-saxena-film

இந்திய விமானப் படையின் முதல் பெண் பைலட்டும், கார்கில் போரில் சாதனை படைத்தவருமான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள். இதில் குஞ்சன் சக்சேனாவாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். சரண் சர்மா இயக்கி உள்ளார். கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 12ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படம் இந்திய விமானப்படையை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், குறிப்பாக விமானப் படையில் பாலியல் வேறுபாடு இருப்பது போன்றும் சித்தரிப்பதாக குற்றம் சாட்டிய மத்திய அரசு, படத்துக்கு தடை விதிக்கக்கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 'படம் ஏற்கனவே திரையிடப்பட்டு விட்டதால் தற்போது தடை உத்தரவு வழங்க முடியாது. பட தயாரிப்பு நிறுவனம், படத்தின் இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கதை நாயகியான குஞ்சன் சக்சேனா உள்பட படத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். என்றார். வழக்கு வருகிற 18ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரன்பீர், ரன்வீருக்கு 'போதை டெஸ்ட்' செய்ய கங்கனா கோரிக்கைரன்பீர், ரன்வீருக்கு 'போதை டெஸ்ட்' ... பாலிவுட் மாபியா குற்றவாளி கரண் ஜோஹர்: கங்கனா ரணவத் பாலிவுட் மாபியா குற்றவாளி கரண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in