Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சேஜல் சர்மா தற்கொலை : டில்லியை சேர்ந்தவர் கைது

23 ஆக, 2020 - 13:17 IST
எழுத்தின் அளவு:
Sejal-Sharma-suicide-:-Boyfriend-arrested

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் சேஜல் சர்மா (25). மும்பையில் தங்கி இருந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். தோ ஹாப்பி ஹை ஜி என்கிற தொடர் ஹிட் மூலம் பிரபலமானார். சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திடீரென தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர் வீட்டில் இருந்து ஒரு கடிதம் சிக்கியது. நடிகை சேஜல் சர்மா எழுதியிருந்த அந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணத்துக்காகத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகக் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தனது மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது அம்மா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடிகை சேஜலின் செல்போன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்ட அன்று, ஆதித்யா வசிஷ்ட் என்பவருக்கு மட்டும் தொடர்ந்து போனில் பேசி இருந்தது தெரிய வந்தது.

டில்லியை சேர்ந்த அவர், ஜிம் பயிற்சியாளராகவும், மாடலிங்காகவும் உள்ளார். அவர் சேஜல் சர்மாவை காதலிப்பதாகவும், அவரை பெரிய நடிகையாக மாற பிளாக் மேஜிக் எனப்படும் சில கண்கட்டி வித்தைகள் செய்வதாக கூறி பல லட்சங்களை வாங்கி ஏமாற்றி இருப்பதும், அந்த மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து காதலன் ஆதித்யா கைது செய்யப்பட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சோனாக்ஷியை விமர்சித்த இளைஞர் கைதுசோனாக்ஷியை விமர்சித்த இளைஞர் கைது சுஷாந்த் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : ராம்கோபால் வர்மா கிண்டல் சுஷாந்த் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in