சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் | வாரணாசி ஸ்வீட் கடைக்காரருக்கு அஜீத் கொடுத்த இன்ப அதிர்ச்சி | எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர் |
லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட பிறகு வாரிசு நடிகைகள் மீது கடும் கோபம் கொண்ட நெட்டிசன்கள், சோனாக்ஷி, ஆலியா பட், சோனம் கபூர் ஆகியோரை கடுமையாக விமர்சித்தனர்.
இதை பொறுக்க மாட்டாமல் சோனாக்ஷி, ஒருவர் மரணமடைந்திருக்கும் நேரத்தில் சிலர் அவர்கள் பிரச்னைகளைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அப்படி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறியிருந்தார். இதனால் அவர் கூடுதலாக விமர்சிக்கப்பட்டார். வேறு வழியின்றி சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து வெளியேறினார்.
அதன்பிறகும் தன்னை பற்றி அவதூறாக எழுதி வருகிறவர்கள் பற்றி சோனாக்ஷி சின்ஹா மும்பை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் அகமதாபாத்தைச் சேர்ந்த சஷிகாந்த் ஜாதவ் (27) என்பவரை கைது செய்தனர். இதற்காக மும்பை சைபர் கிரைம் போலீசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சோனாக்ஷி.