Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்த் சிங் தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

19 ஆக, 2020 - 12:29 IST
எழுத்தின் அளவு:
Sushant-case-:-Supreme-court-order

புதுடில்லி : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் (34) கடந்த ஜூனில் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, பீஹார் போலீசில் சுஷாந்தின் தந்தை புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. மகாராஷ்டிரா, பீஹார் போலீசார் தனித்தனியாக விசாரித்து வருவதால் இருமாநிலங்களுக்கு இடையே அரசியல் பிரச்னையும் நிலவுகிறது. இந்நிலையில் சுஷாந்த் வழக்கை சிபிஐ., விசாரிக்கும் என பீஹார் அரசு அறிவித்தது.

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்த ரூ.15 கோடி மாயம் குறித்தும் ஒரு சலசலப்பும் உள்ளது. இதுதொடர்பாக ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அமலாக்கத்துறை முன் கடந்த ஆக. 7-ம் தேதி ரியா சக்கரவர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தன் மீதான பீஹார் போலீசார் பதிந்துள்ள வழக்கை, மும்பை போலீசாரிடம் மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ரியா சக்கரவர்த்தி தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று(ஆக.,19) விசாரணைக்கு வந்தது. அப்போது, சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ.,யே விசாரிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக தங்களிடம் உள்ள ஆதாரங்களை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க மும்பை போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புற்றுநோய் சிகிச்சை : சஞ்சய் தத் மருத்துவமனையில் அட்மிட்புற்றுநோய் சிகிச்சை : சஞ்சய் தத் ... உலகின் 'டிஸ்லைக்' வீடியோக்களில் 2வது இடம் பிடித்த 'சதக் 2' டிரைலர் உலகின் 'டிஸ்லைக்' வீடியோக்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in