Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஜான்வி கபூர் படத்திற்கு விமானப்படை எதிர்ப்பு

14 ஆக, 2020 - 14:28 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Jhanvi-kapoor-movie

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் என்ற படம், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்தப் படம் கார்கில் போரில் ஈடுபட்ட முதல் விமானப்படை பெண் விமானியான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி உள்ளது. இதில் குஞ்சன் சக்சேனா கேரக்டரில் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

படத்தில் விமானபடையில் குஞ்சன் சக்சேனாவின் வளர்ச்சியை ஆண் அதிகாரிகள் தடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு எதிர்வித்துள்ளது. இதுகுறித்து விமானப்படையின் மக்கள் தொடர்பு பிரிவு, தணிக்கை வாரியம், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

உங்கள் படத்தில் இந்திய விமானப்படையின் பணி சூழல் குறித்து, குறிப்பாக விமானப்படையில் உள்ள பெண்கள் குறித்தும் தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. தனி ஒருவரை புகழ்வதற்காக ஒட்டுமொத்த படைபிரிவை மதிப்பு குறைவாக சித்தரித்திருக்கிறீர்கள். விமானபடையில் எப்போதும் பாலின வேறுபாடுகள் இருந்ததில்லை. ஆண், பெண் அதிகாரிகளுக்கு எப்போதுமே சம உரிமை வழங்கப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஏற்கெனவே கூறியிருந்தோம். அதை நீக்காமலேயே படத்தை வெளியிட்டுள்ளனர். திரைப்படத்துக்கு முன்னால் ஒரு மறுப்பு மட்டும் திரையில் காட்டப்படுகிறது. அதுபோதுமானதல்ல. காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மலய்க்காவின் யோகாமலய்க்காவின் யோகா கரீனா கபூர் இரண்டாவது முறை கர்ப்பம் கரீனா கபூர் இரண்டாவது முறை கர்ப்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17 ஆக, 2020 - 03:26 Report Abuse
J.V. Iyer சினிமாகாரர்கள் என்றுதான் உண்மையை சொல்லி இருக்கிறார்கள்? அவர்களால்தான் நாட்டிற்கு எவ்வளவு பிரச்சினை? யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் தவறாக சொல்லும் கருத்துக்களுக்கு தண்டனை, அபராதம் விதிக்கலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in