Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மஹிமா குற்றச்சாட்டுக்கு, சுபாஷ் கை மறுப்பு

13 ஆக, 2020 - 11:22 IST
எழுத்தின் அளவு:
subhash-ghai-refused-mahima-chaudhry-claim

பிரபல பாலிவுட் நடிகை மஹிமா சவுத்ரி. 1997ஆம் ஆண்டு சுபாஷ் கை இயக்கிய பர்தேஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தபோதும், நடித்த முடித்த பிறகும் தான் புதுமுகம் என்பால் இயக்குனர் சுபாஷ் கை தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.


தன்னிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அதில் அவரே ஒப்பந்தம் எழுதிக் கொண்டார். அவரை கேட்காமல் எந்த படத்திலும் நடிக்க கூடாது. எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். அதையும் மீறி கிடைத்த வாய்ப்புகளை கெடுத்தார். என்னை கேட்காமல் யாரும் மஹிமாவை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று பத்திரிகையில் விளம்பரம் செய்து அவமானப்படுத்தினார். என்று குற்றம் சாட்டினார்.


இதற்கு இயக்குனர் சுபாஷ் கை அளித்துள்ள பதில் வருமாறு: மஹிமாவின் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது. நானும் மஹிமாவும் இன்று வரை நல்ல நண்பர்கள். போன் மூலமாக இன்னும் தொடர்பில் இருக்கிறோம். 1997ஆம் ஆண்டு, பர்தேஸ் வெளியீட்டுக்குப் பிறகு சின்ன பிரச்சினை இருந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்காக மஹிமாவுக்கு சிறந்த நடிகை என்ற விருதும் கிடைத்தது.


எங்கள் ஒப்பந்தத்தில் ஒரு விதியை மீறியதற்காக அவருக்கு என் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த நோட்டீஸை நான் திரும்பப் பெற்றேன். எங்கள் நிறுவனத்துடன் அவருக்கு இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். 3 வருடங்கள் கழித்து அவரது குடும்பத்துடன் என்னை சந்தித்து, அன்று அவரது உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைக்கு மன்னிப்புக் கோரினார். நான் அவரை மன்னித்தேன்.


அன்றிலிருந்து மீண்டும் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். . 2015-ஆம் ஆண்டு எனது கடைசி திரைப்படமான காஞ்சியில் ஒரு பாடலுக்கு ஆடினார். சினிமா வாழ்க்கையில், பழைய சண்டையை வைத்து சுவாரசியம் தேடுவது சகஜமாகி விட்டது. என்று கூறியுள்ளார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கங்கனாவுக்கு எதிராக டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்கங்கனாவுக்கு எதிராக டிரெண்ட் ஆன ... சதக் 2 டிரைலர் - ஒரே நாளில் அதிக 'டிஸ்லைக்' சாதனை சதக் 2 டிரைலர் - ஒரே நாளில் அதிக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in