Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்

07 ஆக, 2020 - 16:33 IST
எழுத்தின் அளவு:
Alia-Bhatt-release-the-poster-after-off-the-comment-option-in-social-media

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜுன் மாதம் தற்கொலை செய்து கொண்டு மறைந்த பிறகு 'நெப்போட்டிசம்' பற்றி பாலிவுட் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அவரது காதலி மீது சிபிஐ விசாரணை ஆரம்பித்தாலும் அவரது தற்கொலைக்கு 'நெப்போட்டிசம்' ஒரு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் பலரும் கருதுகிறார்கள். அதனால், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வாரிசு நடிகர்கள், நடிகைகளைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

'நெப்பேட்டிசம்' குற்றச்சாட்டில் கடுமையாக சிக்கிய ஒரு நடிகை ஆலியா பட். அவருடைய அப்பா மகேஷ்பட் இயக்கியுள்ள 'சதக் 2' படத்தின் ரிலீஸ் போஸ்டரை நேற்று தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் ஆலியா பட். ஆனால், ஏற்கெனவே தன்னுடைய கமெண்ட் பகுதிகளை ஆப் செய்து வைத்திருந்த ஆலியா, நேற்றும் இந்த போஸ்டருக்காக கமெண்ட் பகுதியை ஆன் செய்யவில்லை.

சில தினங்களுக்கு முன்பு கரண் ஜோஹர் தயாரிப்பில் ஸ்ரீதேவியின் மகள் ஜான் கபூர் நடித்துள்ள 'குஞ்சன் சக்சேனா' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட போது கூட அதில் கரண் ஜோஹர் பெயரைக் குறிப்பிடவில்லை. நெப்போட்டிசத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர் கரண் ஜோஹர்தான்.

'சதக் 2' படம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிப்போம் - வித்யா பாலன்கைத்தறி நெசவாளர்களுக்கு ... பிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை பிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in