படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் | ஆஸ்கர் விருது பட நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட தர்மபுரி யானைக்குட்டி | ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா |
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. தமிழ் படங்களிலும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இவர் மும்பை அருகில் உள்ள மலை பிரதேசமான லோனோவாலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டிற்கு மாதம் தோறும் சுமார் 8 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் வரைக்கும் மின் கட்டணம் வரும். ஆனால் கடந்த ஜூன் மாத்திற்கு 2 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷா போஸ்லே மகாராஷ்டிர மாநில மினிவாரியத்தில் புகார் செய்தார். வழக்கமான நபர்களே குடியிருக்கிறோம். எந்த புதிய மின்சாதன பொருட்களும் வாங்கில்லை. பிறகு எப்படி மின் கட்டணம் பல மடங்கு உயர்வாக வந்துள்ளது. என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் ஆஷா போஸ்லே வீட்டுக்கு வந்து சோதனை இட்டனர். பின்னர் மீட்டர் காட்டுகிறபடி மின் கட்டணம் சரியானதுதான். உங்கள் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் மின்கசிவு அதிகமாக இருக்கிறது. அதனை சரி செய்யுங்கள். என்று கூறியிருக்கிறார்கள்.