Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்துடன் ஒரு வருடம் வாழ்ந்தேன் - ரியா

31 ஜூலை, 2020 - 11:08 IST
எழுத்தின் அளவு:
I-live-with-Sushant-one-year-only-says-riya-chakravarthi

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரம் கடந்த சில நாட்களாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்தின் அப்பா, சுஷாந்த் காதலி என்று சொல்லப்படும் ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் கொடுத்துள்ளார். ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் சுஷாந்தை ஏமாற்றியதாகவும், தற்கொலைக்கு தூண்டினர் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

தன் மீதான புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்ற வேண்டும் என ரியா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளாராம். “சுஷாந்துடன் நான் கடந்த ஒரு வருட காலமாக 'லிவிங்-டு-கெதர்' ஆக ஜுன் 8 வரை வாழ்ந்துள்ளேன். அதன்பின் அவர் வீட்டை விட்டு வெளியேறினேன். சுஷாந்த் கடுமையான மனஉளைச்சலில் இருந்ததாக” அந்த மனுவில் ரியா குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், தன்னைத் துன்புறுத்தவே இப்படி ஒரு புகாரை சுஷாந்த் அப்பா கொடுத்துள்ளதாக அவர் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார் ரியா.

கடந்த வாரம்தான் சுஷாந்த் நடித்த கடைசி படமான 'தில் பேச்சரா' ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் சாதனை படைத்தது. படம் பற்றி ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மீண்டும் சுஷாந்த் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆன்லைன்  சாட்டிங்ஆன்லைன் சாட்டிங் தீபிகா படுகோனே மீது முன்னாள் உளவுத்துறை அதிகாரி குற்றச்சாட்டு தீபிகா படுகோனே மீது முன்னாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

soup - vellore,பொலிவியா
01 ஆக, 2020 - 11:21 Report Abuse
soup ..டெஸ்ட்
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
01 ஆக, 2020 - 08:21 Report Abuse
Muraleedharan.M ரியா என தெரிந்தும் அவளுடன் நட்பு வைத்தது தவறு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in