விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
70 வயதுக்கு மேற்பட்ட பாட்டி ஒருவர் ரோட்டில் சிலம்பம் சுற்றிக் காட்டி, அதன்மூலம் வயிற்று பிழைப்புக்கு கையேந்திய வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த பாட்டிக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட், அந்த பாட்டியை வைத்து பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி மையம் ஒன்றை நடத்த விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சோனு சூட் தனது டுவிட்டரில், "அவரை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைக்குமா? அவரோடு சேர்ந்து ஒரு சிறிய பயிற்சி பள்ளி தொடங்கி நம் நாட்டு பெண்களுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
அதே போல நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் அந்த மூதாட்டியை பற்றிய தகவல்களை டுவிட்டர் மூலம் கேட்டறிந்து அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த மூதாட்டியின் பெயர் ஷாந்தா பவார் என்பதும் அவர் புனேவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.