இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் நிலவும் நெபோடிசம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகை கங்கனா ரணவத். குறிப்பாக ஒரு சில வாரிசு நட்சத்திரங்கள் மற்றும் சில இயக்குனர்கள் மீது தான் இவரது பாய்ச்சல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை நக்மா, நெபோடிசம் குறித்து பேசும் கங்கனா ரணவத், அந்த நெபோடிசத்தால் தான் தன்னை வளர்த்துக் கொண்டார் என சில ஆதாரங்களுடன் தனது கருத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இந்த கருத்துக்கு கங்கனா நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும் கங்கனாவின் சார்பாக இயங்கிவரும் அவரது சோசியல் மீடியா டீம் சில விளக்கங்களை பதிலடியாக கொடுத்துள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறியுள்ளதாவது : “நக்மா ஜி.. நீங்கள் சொன்னதுபோல ஆதித்யா பஞ்சாலி கங்கனாவின் பாய்பிரண்ட் அல்ல.. இதை ஏற்கனவே பலமுறை கங்கனா கூறியுள்ளார் அவர் ஒன்றும் கங்கனாவை இயக்குனர் அனுராக் பாசுவிடம் அறிமுகப்படுத்தவில்லை.. சொல்லப்போனால் அனுராக் பாசுவுக்கு ஆதித்ய பஞ்சாலியை அப்போது அவ்வளவாக தெரியாது என்று அவரே சிலமுறை குறிப்பிட்டுள்ளார்
அதேபோல கேங்ஸ்டர் படத்தில் கங்கனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது பலமுறை அவர் ஆடிசனில் கலந்துகொண்டு தேர்வானதால் தானே தவிர, இந்த நெபோடிசத்தால் அல்ல. கைட்ஸ் படத்தின் மூலம் ஹிரித்திக் ரோஷன் மூலமாக கங்கனாவுக்கு மறுவாழ்வு கிடைத்ததாக கூறியுள்ளீர்கள்.. ஆனால் அந்தப்படத்தில் ஒரு துணை நடிகை போல கங்கனா நடத்தப்பட்டதால் அவரது திரையுலக வாழ்க்கையை கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்தது.. அதனால் மீண்டும் ஹிரித்திக் ரோஷனுடன் நடிக்க விரும்பாவிட்டாலும் அவர் நடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதுதான் உண்மை.
கங்கனா தனது சகோதரியையே தனது மேனேஜராக நியமித்துள்ளார் இது நெபோடிசம் இல்லையா என்று கேட்டுள்ளீர்கள்.. எந்த ஒரு ஏஜென்சியினரும் கங்கனாவுக்கு உதவியாக செயல்பட முன்வரவில்லை.. காரணம் அந்த ஏஜென்சிகள் சொல்படி கேட்டுக்கொண்டு, பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளிலும் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் தன்மீது வீசி எறியப்படும் பணத்திற்காக நடனம் ஆடுவதற்கு கங்கனா விரும்பவில்லை.. அதனால்தான் சினிமா வியாபாரம் பற்றிய மிகப்பெரிய புரிதல் இல்லாத, ஆங்கிலம் கூட அரைகுறையாகவே தெரிந்த கங்கனாவின் சகோதரியே அவருக்கு மேனேஜர் ஆக வேண்டிய சூழல் உருவானது.. அதனால் இதுபோன்ற பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது