சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆரத்யா ஆகியோருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் அமிதாப்பச்சன் குணமடைந்து விட்டதாகவும், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும் நேற்று தகவல்கள் வெளியானது. இதனை அமிதாப்பச்சன் மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் "எனக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்களில் உண்மை இல்லை. பொறுப்பற்றது; போலியானது" என்று கூறியிருக்கிறார்.