பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த தில் பேச்சாரா திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து பிரபல எழுத்தளார் சேதன் பகத், “சுஷாந்த் நடித்த கடைசிப்படம் வெளியாக இருக்கிறது. விமர்சனம் செய்பவர்கள் உங்கள் மோசமான தந்திரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நேர்மையாக விமர்சனம் செய்யுங்கள்.. இதுவரை நீங்கள் பலருடைய வாழ்க்கையை அழித்தது போதும். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டு இருக்கிறோம்” என எச்சரிக்கை விடுப்பது போல டுவீட் போட்டிருந்தார்.
இந்த கருத்தை விமர்சிப்பதுபோல பிரபல தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவின் மனைவி அனுபமா சோப்ரா கிண்டலாக ஒரு டுவீட் போட்டிருந்தார்... அதை கண்டு கோபமான சேதன் பகத், “மேடம்.. உங்கள் கணவர் (விது வினோத் சோப்ரா) என்னை பப்ளிக்காக கொடுமைப்படுத்தினார்.. எனக்கு வரவேண்டிய விருதுகளை எல்லாம் தட்டிப்பறித்து கொண்டார்.. எனது கதைகளுக்கான உரிய அங்கீகாரம் தர மறுத்ததன் மூலம் என்னை தற்கொலையின் விளிம்பிற்கே தள்ளினார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டு தானே இருந்தீர்கள்.. அப்போது எங்கே போச்சு இந்த பேச்சு” என பதில் கொடுத்துள்ளார்.
ஆமிர்கான், மாதவன் நடித்த 3 இடியட்ஸ் படத்தின் கதை சேதன் பகத் எழுதிய 'பைவ் பாயிண்ட் சம்ஒன்' என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.. ஆனால் தயாரிப்பாளரான விது வினோத் சோப்ரா அந்தப்படத்தில் தனக்கு உரிய அங்கீகாரத்தை தராமல் இருட்டடிப்பு செய்துவிட்டனர் என அந்தப்படம் வெளியானபோது சேதன் பகத் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தகது.