வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய திடீர் மரணம் இந்திய சினிமா ரசிகர்களை உலுக்கியது.
பாலிவுட்டில் உள்ள வாரிசு சினிமா அரசியல் தான் அதற்குக் காரணம் என பல ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள். அப்படிப்பட்ட 'நெப்போட்டிசம்' ஹிந்தித் திரையுலகில் இருக்கிறது என ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் குற்றம் சாட்டினார். சுஷாந்த் தற்கொலைக்கு பாலிவுட்டில் இருக்கும் 'நொப்போட்டிசம்' பெரும் காரணம் என வெளிப்படையாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
இதனிடையே, நேற்று டிவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா ரணவத், ஹிந்தித் திரைப்பட இயக்குனர்கள் மகேஷ்பட், கரண் ஜோஹர், ஆதித்ய சோப்ரா, திரைப்பட விமர்சகர் ராஜீவ் மசந்த் ஆகியோரையும் போலீஸ் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.
மேலும், சுஷாந்த் தற்கொலை பற்றி தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போனால் இந்திய அரசு தந்த பத்மஸ்ரீ விருதையும் திருப்பித் தந்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.