வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் | தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு' | பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி |
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு சினிமா வாரிசு அரசியல்தான் காரணம் என ரசிகர்கள் பலர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினர்.
இயக்குனர் கரண் ஜோஹர் டிவி நிகழ்ச்சியில் சுஷாந்த் சிங் பற்றிய கேள்வி ஒன்றிற்கு யார் அவர் எனத் தெரியாதது போலக் கேட்டார் ஆலியா பட். அந்த சம்பவத்தை நினைவில் கூர்ந்து சுஷாந்த் மரணத்திற்குப் பின் பலரும் ஆலியாவை 'டிரோல்' செய்தனர். சில சினிமா வாரிசுகள் சமூக வலைத்தளங்களை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலையும் அதனால் வந்தது.
இந்நிலையில் ஆலியா பட்டின் சகோதரி ஷாஹீன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு 'ரேப் மிரட்டல்கள்' வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அப்படி வந்த சில மெசேஜ்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இனி அப்படி மெசேஜ்களை அனுப்புபவர்களை பிளாக் செய்யப் போவதாகவும், பின்னர் இன்ஸ்டாகிராமில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/B9viqxPlyKL/