Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்

07 ஜூலை, 2020 - 12:39 IST
எழுத்தின் அளவு:
TO-Pay-EB-Pill-Arshad-Warsi-sale-his-Painting

பாலிவுட்டின் ஆல்இன்ஆல் அழகுராஜா அர்ஷத் வர்ஷி. நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், பாடகர், ஓவியர் என பன்முக திறமை கொண்டவர். 52 வயதான அர்ஷன் வர்ஷி தொகுப்பாளரான மரியா கொரட்டியை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசிக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

தற்போது சினிமா படப்பிடிப்பு, சின்னத்திரை படப்பிடிப்பு, விழாக்கள் எதுவும் இல்லாததால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மின்கட்டணம் வந்துள்ளது. இதனால் கொதித்துப்போன அர்ஷத் கூறியிருப்பதாவது:

எனக்கு வந்த மின் கட்டணம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 564. அது என் வங்கி கணக்கில் இருந்து என்னை கேட்காமலயே எடுக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் என்கிற பெயரில் நடக்கும் இந்த கொள்ளையை தடுத்து நிறுத்த யாருமே இல்லையா ?

நான் ஓவியம் வரைவேன் என்று என் நண்பர்களை தவிர யாரிடமும் கூறியது இல்லை. என் நண்பர்கள் வருவார்கள். அவர்களுக்கு ஏதாவது ஓவியம் பிடித்திருந்தால் எடுத்துச் செல்வார்கள். வேலையில் பிசியானதால் ஓவியம் வரைவதை நிறுத்தினேனன். தற்போது மீண்டும் வரையத் துவங்கிவிட்டேன்.

ஓவியம் வரைய நேரம் செலவாகும். இந்த லாக்டவுனில் ஓவியம் வரை நிறைய நேரம் இருக்கிறது. மக்களே தயவு செய்து என் ஓவியங்களை வாங்குங்கள். மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அடுத்த மாத கட்டணத்தை செலுத்த சிறுநீரங்களை தான் விற்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணைசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா ... சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

07 ஜூலை, 2020 - 21:55 Report Abuse
chandran, pudhucherry இஷ்டத்துக்கு கரண்ட் உபயோகப்படுத்தினா பில் கட்டத்தான் வேண்டும். உபயோகிக்கப்பட்ட கணக்கீடு கொண்டு ஒவ்வொரு நுகர்வோரும் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம். முறைகேடு இருப்பதாக தெரியவந்தால் மின் ஆணையத்தை அனுகலாம் இழப்பீடு கூட பெறலாம். மின் வாரியங்கள் வகுக்கப்பட்ட முறைபடி மட்டுமே கட்டணம் வசூலிக்க முடியும். இந்த கூத்தாடி கூட்டத்திற்கு மூளை கிடையாது
Rate this:
07 ஜூலை, 2020 - 16:11 Report Abuse
rasheed ஏற்க்கனவே நடிகை ராதா மகள் மும்பையில் மின் கட்டணம் 1 லட்சம் வந்து உள்ளது என்று புகார் சொன்னார் இபோது இவர் இப்படி சொன்னால் அம்மாவை நினைத்து நன்றி சொல்லுங்க மின் கட்டணம் தமிழ்நாடே பரவா இல்லை நன்றி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in