Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை

06 ஜூலை, 2020 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Sushant-singh-suicide-:-Police-enquiry-Sanjay-leela-bhansali

ஹிந்தித் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மரணம் இந்திய சினிமா ரசிகர்களை உலுக்கியது. பாலிவுட் திரையுலகத்தில் இருக்கும் வாரிசு சினிமா அரசியலால் தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டினர். பாலிவுட்டில் உள்ள சில நட்சத்திரங்களும் அந்த 'நெப்போட்டிசம்' பற்றி அதிகம் பேசினர்.

இதனிடையே, சுஷாந்தின் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசார் பிரபல ஹிந்திப் பட இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலியிடம் இன்று விசாரணை நடத்தினர். மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இன்று நண்பகல் ஆஜரான சஞ்சயிடம் சில மணி நேரங்கள் விசாரணை நடந்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த 'கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா' படத்தில் சுஷாந்த் சிங் நடிக்க வேண்டி இருந்ததாகவும், ஆனால் யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தம் காரணமாக சுஷாந்த் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் சொல்கிறார்கள். அது குறித்தும் சஞ்சயிடம் விசாரிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகிறது. சுஷாந்த் தற்கொலை வழக்கில் இதுவரை 29 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில பாலிவுட்டின் பிரபல இயக்குனர்கள் விசாரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை ... மின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர் மின் கட்டணம் செலுத்த ஓவியம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Tamizharasan .P - Gazipur,வங்கதேசம்
08 ஜூலை, 2020 - 12:19 Report Abuse
Tamizharasan .P ப்ளீஸ் ஸ்டாப் யுவர் அட்வெர்ட்டிஸ்ட்மென்ட்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in