விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
ஹிந்தித் திரையுலகின் மூத்த நடன இயக்குனரான சரோஜ்கான் முமபையில் இதயக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும், தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சரோஜ்கான் நடனம் அமைத்த பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அந்தப் பாடல்களில் அவரது நடனம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட ஒன்று. ஹிந்திப் பாடல்கள் நடனங்களுக்கு அந்தக் காலத்தில் இருந்தே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
சரோஜ்கான் நடனம் அமைத்த பல பாடல்களில் 80, 90களின் முன்னணி நாயகியாக இருந்த மாதுரி தீட்சித் தனது நடன அசைவுகளால் பெரிய புகழைப் பெற்றார். ஏக் தோ தீன் பாடலில் இருந்து தபா ஹோ கயா பாடல் வரை மாதுரியின் நடனத்தை இன்றும் பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.
சரோஜ் மறைவுக்கு மாதுரி தெரிவித்துள்ள இரங்கலில், “எனது நண்பரும், குருவுமான சரோஜ்கான் இழப்பால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். நடனத்தில் எனது முழு திறனை வெளிப்படுத்த எனக்கு உதவியதற்காக அவருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். அற்புதமான திறமைசாலி ஒருவரை உலகம் இழந்துவிட்டது. உங்களை மிஸ் செய்வேன், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.