போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி |
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டாலும் அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார். மேலும் ஹாலிவுட்டின் சீரியல் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்துடன் பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு டிவி சீரியல்கள் மற்றும் வெப்சீரிஸ் மாதிரியான தொடர்கள் தயாரிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில், இந்த செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. எனது பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம், உலகம் முழுக்க திறமைகளை கொண்டவர்களை வைத்து சிறந்த படைப்புகளை உருவாக்குவதே நோக்கம். அமேசான் உடனான அடுத்த கூட்டு முயற்சிக்கு இது தான் அஸ்திவாரம். எனக்கு பக்கபலமாக இருக்கும் ஜெனிபர் சால்கே உள்ளிட்ட அமேசான் குழுவிற்கு நன்றி. புதிய சிந்தனைகளைத் தொடர்ந்து ஆராய்வதே எனது தேடல். நிறைய பணிகள் உள்ளன. எனது பயணத்தில் பெரும் துணையாக இருக்கும் ரசிகர்களுக்கும் இந்தநேரத்தில் நன்றி என்றார்.