Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தற்கொலை செய்து கொண்ட சுஷாந்தின் ஒப்பந்தங்கள் போலீசிடம் ஒப்படைப்பு!

21 ஜூன், 2020 - 14:07 IST
எழுத்தின் அளவு:
Sushants-agreement-handover-to-Police

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சினிமா ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், யஷ் ராஜ் பிலிம்ஸ் தங்களுடன் சுஷாந்த் செய்த ஒப்பந்தத்தின் நகல்களை மும்பை காவல்துறையிடம் சமர்ப்பித்தது.

"கை போ சே!", "எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி", "சிச்சோர்" போன்ற படங்களின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட சுஷாந்த் சிங் (34) ஞாயிற்றுக்கிழமை தனது பாந்த்ரா குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. நடிகரின் தற்கொலை தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள், அவரது ஊழியர்கள், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபார்த்தி மற்றும் கதபாத்திர இயக்குனர் முகேஷ் சாப்ரா உள்ளிட்ட 15 பேரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

யஷ் ராஜ் பிலிம்ஸ் உடனான ஒப்பந்தத்தை சுஷாந்த் முடித்துவிட்டதாகவும், தன்னையும் அவர்களின் பேனரில் பணிபுரிவதை நிறுத்துமாறு சுஷாந்த் கேட்டுக் கொண்டதாக அவரது காதலி போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்த இரண்டு படங்களில் சுஷாந்த் நடித்துள்ளார். மூன்றாவதாக பாணி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த ஒப்பந்தத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் ரத்து செய்தது.

இந்நிலையில் சுஷாந்த் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்களை கோரி பாந்த்ரா போலீசார் யஷ் ராஜ் பிலிம்ஸுக்கு ஜூன் 18 அன்று கடிதம் அனுப்பினர். அதன்படி, அவர் கையெழுத்திட்ட ஒப்பந்த நகலை விசாரணை அதிகாரியிடம் நேற்று (ஜூன் 20) அந்நிறுவனம் ஒப்படைத்துள்ளது. அவர்கள் அளித்த தகவல்களின் உண்மை தன்மையை காவல்துறை சரிபார்த்து வருவதாக துணை போலீஸ் கமிஷனர் அபிஷேக் திரிமுகே தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த் சிங் இழப்பை தாங்க முடியாமல் இளம் ஆசிரியை தற்கொலைசுஷாந்த் சிங் இழப்பை தாங்க ... ரசிகர்களுக்கு சல்மான் கான் வேண்டுகோள் ரசிகர்களுக்கு சல்மான் கான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in