18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
1994ஆம் ஆண்டு இந்தியா சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை தட்டிச்சென்றவர் சுஷ்மிதா சென். தஸ்தக் என்கிற இந்திப்படத்துல நடிகையாக அறிமுகமான சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் என்கிற படத்தில் நடித்தார்.. தொடர்ந்து இந்திப்படங்களில் நடித்துவந்தாலும் ஒருகட்டத்தில் அவரது படங்களுக்கான வரவேற்பு குறைந்தது. கடைசியாக 2015ல் பெங்காலி மொழியில் 'நிர்பாக்' என்கிற படத்தில் நடித்தார் சுஷ்மிதா சென்.
இந்தநிலையில் தற்போது 'ஆர்யா' என்கிற வெப் சீரிஸின் மூலம் மீண்டும் நடிப்புலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சுஷ்மிதா சென். இந்தா ஆர்யா வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகி உள்ளது. குடும்பம், பாசம், துரோகம், ஆக்ஷன் என கலந்துகட்டி உருவாகி உள்ள இதில் சுஷ்மிதா ஆக்ஷன் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் அசத்தி உள்ளார். ராம் மத்வானி இயக்கி, நடிக்கவும் செய்துள்ளார். திரில்லர் நிறைந்த ஆக்ஷ்ன் சீரிஸாக உருவாகி உள்ள இந்த சிரீஸ் ஜுன் 19 முதல் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.