தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
2019ம் வருடம் ஜுன் மாதம் முதல் 2020ம் வருடம் மே மாதம் வரையில் உலகில் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதில் இந்திய நடிகரான அக்ஷய்குமார் 48.5 மில்லியன் டாலர் வருவாய் பெற்று உலக அளவில் 52வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய ரூபாயில் 366 கோடி ரூபாய்.
முந்தைய ஆண்டான 2018 - 2019ம் ஆண்டில் அக்ஷய்குமார் ஈட்டிய வருவாய் 466 கோடி ரூபாய். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 100 கோடி ரூபாய் குறைவுதான்.
இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கும் அக்ஷய்குமார் இந்த கொரானோ காலத்தில் நிவாரணத் தொகையாக 25 கோடியை ஏற்கெனவே தந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பல நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.
போர்ப்ஸ் பட்டியலில் 590 மில்லியன் டாலர் பெற்று 22 வயதான இளம் பெண் தொழிலதிபர் கிலீ ஜென்னர் முதலிடம் பெற்றுள்ளார்.
நடிகர் ஜாக்கி சான் 46 மில்லியன் டாலர் வருவாயுடன் 80வது இடத்தில் உள்ளார்.