நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
பிரபல பாலிவுட் குணசித்ர நடிகை மோகனா குமாரி. இந்தி தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மோகனா குமாரி தனது குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவருடன் தங்கி இருந்த அவரது கணவரின் அம்மாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மோகனா குமாரி சிங் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். "நாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தோம். தனித்து இருந்தோம், அரசின் விதிமுறைகளை கடைபிடித்தோம். அப்படி இருந்தும் கொரோனா எங்கள் குடும்பத்தை எப்படி தாக்கியது என்று தெரியவில்லை" என்கிறார் மோகன குமாரி.