சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு | டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? |
தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நானி ஜோடியாக நடித்தவர் வாணி கபூர். அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. ஏராளமான பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது கொரோனா காலம் என்பதால் வீட்டிற்குள் இருக்கிறார்.
பாலிவுட் நடிகைகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் தங்களால் இயன்ற உதவிகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செய்து வருகிறார்கள். அந்த வகையில் வாணி கபூர் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். பிரபல நிறுவனத்துடன் இணைந்து அவர் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவத: ஒரு ஏழை குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு வேளை உணவிற்கு 30 ரூபாய் செலவாகிறது. ஒரு நாளைக்கு ரூ.90. குறைந்தபட்சமாக அந்த தொகையை நிதியாக கொடுத்து விட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
நிகழ்சிக்கு வருகிறவர்களில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுடன் இணையதளம் வாயிலாக பொழுதை கழிக்க முடிவு செய்திருக்கிறேன். அவர்கள் என்னுடன் விருந்து சாப்பிடலாம், பேசலாம் என்கிறார் வாணி கபூர்.