Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கொரோனாவால் மைதான் படப்பிடிப்பு செட் தகர்ப்பு

31 மே, 2020 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Maidhan-set-demolished

முன்னாள் கால்பந்து வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக கொண்டு பாலிவுட்டில் உருவாகி வரும் படம் மைதான். இதில் அஜய் தேவ்கான், பிரியாமணி நடிக்கிறார்கள். அமித் ரவீந்திரநாத் இயக்குகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஜீ டி.வியுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்புக்காக மும்பை புறநகர் பகுதியில் 16 ஏக்கர் பரப்பில் கால்பந்து மைதானம் மற்றும் அதை சுற்றி பயிற்சி கூடங்கள், குடியிருப்புகள் உள்பட பகுதிகள் ஷெட்டாக போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த ஷெட்டை 200 தொழிலாளர்கள் 2 மாதமாக உருவாக்கினார்கள்.

இதில் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமுலுக்கு வந்ததால் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால் ஷெட்டை பராமரிக்கவே நாள் ஒன்றுக்கு லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருந்தது. என்றாலும் தற்போது படப்பிடிப்பு நடக்கும் சூழ்நிலை இல்லை என்பதால் அந்த ஷெட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.

இதுகுறித்து போனி கபூர் கூறியிருப்பதாவது: 16 ஏக்கர் பரப்பில் ஒரு விளையாட்டு மைதானத்திற்கான அத்தனை கட்டமைப்புகளுடனும் அந்த அரங்கம் உருவாக்கப்பட்டது. கொரோனா பிரச்சினையில் படப்பிடிப்புகள் தடைபட்டது. விரைவில் சரியாகி விடும் என்பதால் ஷெட்டை பாதுகாத்து வந்தோம். ஆனால் இப்போதைக்கு படப்பிடிப்புகள் சாத்தியம் இல்லை என்பதால் அதனை பராமரிக்க முடியாமல் அகற்ற வேண்டியதாகிவிட்டது. அடுத்து மழைகாலம் வர இருப்பதால் இனி நவம்பர் மாதம் புதிய ஷெட் அமைத்துதான் படமாக்க முடியும் என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நிற வெறிக்கு எதிராக பிரியங்கா ஆவேசம்நிற வெறிக்கு எதிராக பிரியங்கா ஆவேசம் ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார் ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
03 ஜூன், 2020 - 02:52 Report Abuse
NicoleThomson இவரு கேரளாவில் பிறந்திருந்தா வேற மாதிரி சொல்லி படத்திற்கு பப்லிசிட்டி தேடியிருப்பாரு , ஆனா கதை வேற மாதிரி போயிடுச்சே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in